Posts

ஐரோப்பியரின் வருகை

Image
அறிமுகம்: என் தந்தை நடேசனுக்கும், என் தாய் கல்யாணி அம்மாளுக்கும், இந்த நூல் சமர்ப்பணம் -நடேசன் ரமேஷ் கடல்வழியை கண்டுபிடித்த வாஸ்கோடகாமா ஐரோப்பியர்களில் பெருமைக்குறியவர்கள் போர்ச்சுகீசியர்கள் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஸ்பெயினின் ராணி முதலாம் இஸபெல்லாவிடம், நிதி வாங்கிக்கொண்டு இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பியவர்தான், இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பிறந்த, இத்தாலியரான  கிரிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால் வட கிழக்கை நோக்கி கிளம்பியவர், தெற்கு நோக்கி சென்று அமெரிக்காவை கண்டுபிடித்தார். ரொம்ப நாளாகவே போர்ச்சுகீசிய மன்னர் மானுவேலுக்கு, எப்படியாவது இந்தியாவிற்கான கடல்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆசை மனதில் வந்து சென்று கொண்டே இருந்தது. ஸ்பெயின் ராணி இஸபெல்லாவின் முயற்சியிலும் ஒரு வெற்றி இருந்ததை அறிந்த மானுவேல், அவருக்கு போட்டியாக துரிதமாக செயல்பட்டார்.   "யாரை அனுப்புவது? எவ்வாறு அனுப்புவது? வாஸ்கோடகாமா (1469-1524) யோசனைகளில் சில நாட்கள் நகர்ந்த நிலையில், அவர் மணக்கண்ணின் முன்னால் நின்றார் ஒரு இளைஞர். அவர் பெயர் வாஸ்கோடகாமா. அவர்தான் இந்தியாவி